10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டதும், ஆகஸ்ட் முதல் வாரம் மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.. கல்வி அமைச்சர் அவர்கள்..
முதல் வாரம் மதிப்பெண் சான்று
வழங்க ஏற்பாடு.. கல்வி அமைச்சர் அவர்கள்..
எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்று, ஆகஸ்ட் முதல் வாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில், அவர் நேற்று கூறியதாவது: பள்ளிகள் திறப்பு குறித்து, மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. வரும் மாதம் அல்லது செப்., மாதம் திறக்கலாமா என கேட்டுள்ளனர். தற்போது கொரோனா பரவல் பல மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. எனவே, அதை கட்டுக்குள் கொண்டு வந்து, பெற்றோர் விருப்பங்களை அறிந்து, அரசு முடிவை தெரிவிக்கும். இதற்கான பணி, முதல்வர் தலைமையில் நடந்து வருகிறது. மேல்நிலை வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம், ஒன்று முதல், பத்தாம் வகுப்புவரை, படிப்படியாக பாடப்புத்தகம் வழங்கப்படும்.
ஆக., முதல் வாரத்தில், எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்றிதழ் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் வீட்டில் இருந்துபடி படிப்பை தொடர, 'கல்வி சேனல்' மூலம் தற்போது பாடம் நடத்தப்படுகிறது. காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, பாடம் நடத்தப்படுகிறது. வரும் ஆக., 1 முதல், 14 தொலைக்காட்சி சேனல் மூலம் பாட நடத்தப்படும். எந்தெந்த சேனலில், எப்போது, என்ன பாடம் நடத்தப்படும் என்ற விபரம் விரைவில் அறிவிக்கப்படும். ஒவ்வொரு சேனலும், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், ஐந்து மணி நேரம் என, இதற்காக நேரம் ஒதுக்கி தருகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments: