Breaking

11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறையானது இரத்து ..





11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறையானது இரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய முறைகளின் படி ஆறு பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பின்ப்படி, ஐந்து பாடங்கள் முறையானது இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து பாட முறை என்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும் என்று கருத்துக்கள் எழுந்தது.
அரசியல் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஐந்து பாட திட்டங்கள் கடுமையான எதிர்ப்பை சந்திக்கவே, இதனால் தற்போது இந்த ஐந்து பாட முறைகள் இரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் இயல்பான பழைய ஆறு பாட திட்டங்கள் நடைமுறையே செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பட்டுள்ளது.

மேலும், 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்களை குறைத்து, சி.பி.எஸ்.சி தரத்திற்கு உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்ட தனிக்குழுவின் முடிவின் அடிப்படையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் திடீர் அறிவிப்பு மற்றும் திடீர் பின்வாங்கல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

No comments:

Powered by Blogger.