Breaking

ஆகஸ்ட் 15 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கரோனா மருந்து.. இலக்கு நிர்ணயித்தது ஐ சி எம் ஆர்..





ஆகஸ்ட் 15 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கரோனா மருந்து.. இலக்கு நிர்ணயித்தது ஐ சி எம் ஆர்..

உலகெங்கும் கொரோனா வைரஸால் ஆட்டம் கண்டுள்ள நிலையிலும், அதற்கு எதிரான தடுப்பு மற்றும் குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் மும்முரமாக சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான முயற்சி இந்தியாவிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அண்மையில் புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் கண்டுபிடுத்த COVAXIN என்ற தடுப்பு மருந்து விலங்குகளிக்கு அளிக்கப்பட்ட சோதனை வெற்றிகரமான முடிவை கொடுத்ததை அடுத்து மனிதர்களிடையே பரிசோதிக்க இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து சோதனையை விரைவுபடுத்துமாறு பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடிதம் எழுதியுள்ளது.ஜூலை 7ம் தேதிக்குள் அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த சோதனை வெற்றியடைந்தால் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஐ.சி.எம்.ஆர். இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தை போல ஸைடஸ் என்ற நிறுவனமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு மருந்துக்கும் மனிதர்களிடையே முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை தொடங்க இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது.

No comments:

Powered by Blogger.