Breaking

இன்றைய ராசிப்பலன் - 16.07.2020.




16-07-2020, ஆடி 01, வியாழக்கிழமை.

இராகு காலம் - மதியம் 01.30-03.00

எம கண்டம்- காலை 06.00-07.30

குளிகன் காலை 09.00-10.30.



மேஷம்

இன்று எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. வராத பழைய கடன்கள் வசூலாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டு.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல்நிலையில் உபாதைகள் உண்டாகும்.

கடகம்

இன்று பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். திடீர் பயணங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும்.


சிம்மம்

உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.

கன்னி

இன்று உங்களுக்கு பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கை கிடைக்கும். பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். நண்பர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம்.

துலாம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்போது நிதானம் தேவை .

விருச்சிகம்

பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.


தனுசு

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மன அமைதி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மகரம்

திருமண நிகழ்ச்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். வரவைக் காட்டிலும் செலவு அதிகமாகும்.

கும்பம்

பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் தாமதம் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும்.

மீனம்

நண்பர்களின் உதவியால் வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

No comments:

Powered by Blogger.