Breaking

இன்றைய ராசி பலன்கள் பற்றி அறிவோம்.. 18-07-2020




இன்றைய ராசி பலன்கள் பற்றி அறிவோம்..

18-07-2020, ஆடி 03, சனிக்கிழமை.

இராகு காலம் - காலை 09.00-10.30

எம கண்டம் மதியம் 01.30-03.00

குளிகன் காலை 06.00-07.30.


மேஷம்

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

சுப முயற்சிகளில் தடைகள் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். பராமரிப்பிற்காக செலவுகள் உண்டாகலாம். சேமிப்பு குறையும் நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டு.

மிதுனம்

தொழில் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தனவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகள் இருக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்

உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகலாம். வேலையில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். தேவையில்லாத இல்லாத செலவுகளால் கடன் வாங்க நேரிடலாம்.


சிம்மம்

சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டு. செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

கன்னி

ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்ப செய்திகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் லாபகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.

துலாம்

மன அமைதி ஏற்படும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டு. நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயல்களிலும் இடையூறுகள் ஏற்படலாம். எதிலும் கவனம். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.


தனுசு

பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டு. புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

மகரம்

தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகள் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

கும்பம்

வியாபாரத்தில் போட்டி பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். மன நிம்மதி உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மனக் குழப்பங்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

மீனம்

வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு சுமாராக இருக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

No comments:

Powered by Blogger.