ஜுலை -19, 1921 கதிரியக்கத் தடுப்பாற்று வினைக்கணிப்புக்காக, நோபல் பரிசு பெற்ற இரண்டாவது அமெரிக்கப் பெண் ரோசலின் சுஸ்மன் யாலோ பிறந்த தினம். இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்.
ஜுலை -19, 1921
கதிரியக்கத் தடுப்பாற்று வினைக்கணிப்புக்காக, நோபல் பரிசு பெற்ற இரண்டாவது அமெரிக்கப் பெண் ரோசலின் சுஸ்மன் யாலோ பிறந்த தினம்.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்.
ரோசலின் சுஸ்மன் யாலோ (Rosalyn Sussman Yalow) ஜுலை 19, 1921 நியூயார்க் நகரில் பிறந்தார். இலினொய் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். ரோசலின் பிரான்க்ஸ் அனுபவ நிர்வாக மருத்துவமனையில் சேர்ந்து, மவுண்ட் சினாய் மருத்துவப் பிரிவின் ஆய்வுப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பெர்சன் என்பவருடன் இணைந்து அங்கு தொடர்ந்து உயிர் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தைராய்டு சிகிச்சைக்கு அயோடின் பயன்படுத்தும் முன்னோடி என்று அவரை அழைக்கின்றனர்.
மனித உடலின் சீரம் புரதத்தின் விநியோகத்தை ஆராய்ந்து அவர் இன்சுலின் சார்ந்த உயிர் எதிர்பொருளைக் கண்டுபிடித்தார். மேலும் காஸ்ட்ரின், பாரா-தைராய்டு சுரப்பி, மனித வளர்ச்சி ஹார்மோன் என்று அழைக்கப்படும் கார்ட்டிகோட்ரோபின் ஆகியவற்றையும் ஆராய்ந்து பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். ரேடியோ இம்யூனோ அஸ்சே என்று அழைக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்புகளுக்கான யாலோ 1977ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ரோஜர், கில்லிமன், ஆண்ட்ரூ ஆகியோருடன் இணைந்து பெற்றார். கெர்டி கோரிக்குப் பின்னர் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற இரண்டாவது அமெரிக்கப் பெண் இவராவார்.
முன்னதாக நீரழிவு நோய்க்குக் காரணமான இன்சுலின் பற்றி பெர்சன் என்ற மருத்துவருடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார். ஹார்மோன்கள், வைட்டமின்கள், நொதிகள் என்று பல கூறுகளிலும் அவற்றின் அளவு சிறிதாக இருந்தபோதும், வணிக மதிப்பு பெரிய அளவில் இருந்தது. ஆயினும் இந்த ஆய்வுகள் மனித குலத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் தங்களின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற மறுத்துவிட்டார்.
1975 ஆம் ஆண்டில், யலோவ் மற்றும் பெர்சன் ஆகியோருக்கு அமெரிக்க மருத்துவ சங்க அறிவியல் சாதனை விருது வழங்கப்பட்டது. இது விஞ்ஞான சாதனைகளில் அவர்கள் செய்த சிறப்பான பணிகளை அங்கீகரிப்பதற்காக சிறப்பு சந்தர்ப்பங்களில் தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்க விருது ஆகும். கதிரியக்கத் தடுப்பாற்று வினைக்கணிப்புக்காக, நோபல் பரிசு பெற்ற ரோசலின் சுஸ்மன் யாலோ
மே 30, 2011ல் தனது 89வது அகவையில் தி.பிராங்க்ஸ், நியூயார்க்கில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
No comments: