Breaking

2018-19 ஆண்டுக்கான B.Ed மாணவர் சேர்க்கை ரத்து..


2018-19 ஆண்டுக்கான
B.Ed மாணவர் சேர்க்கை ரத்து..

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் பி.எட் பட்டப்படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. பி.எட் பட்டப்படிப்பு ஓராண்டு படிப்பாக இருந்தவரை, தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இதற்கான அங்கீகாரத்தை வழங்கி வந்தது. தற்போது பி.எட் படிப்பு 2 ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளதால் அதற்கான அங்கீகாரத்தை யு.ஜி.சி வழங்குகிறது.

இந்த நிலையில் தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் அங்கீகாரத்தை மட்டும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பெற்றிருந்ததால், தற்போது 2018-2019 ஆண்டு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பி.எட் மாணவர் சேர்க்கையினை ரத்து செய்ய யு.ஜி.சி உத்தரவிட்டது.


இதனை தொடர்ந்து 2118-19ம் ஆண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து மாணவர்கள் செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 400-க்கும் அதிகமானோர் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்பில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.