மருத்துவ மேற்படிப்பிற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், இன்று முதல், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் அறிவிப்பு..
மருத்துவ மேற்படிப்பிற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், இன்று முதல், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் அறிவித்துள்ளது.புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.டி., - எம்.எஸ்., உள்ளிட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு நடந்து முடித்துள்ளது.இந்நிலையில் முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கு 'கட் - ஆப்' மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கும் வாய்ப்பினை சென்டாக் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், இன்று (17ம் தேதி) முதல் 21ம் தேதி வரை சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் சேர்ந்த பிறகு காலியிடங்கள் தெரிவிக்கப்படும்.புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள், இறுதி கட்ட கவுன்சிலிங்கில், தரவரிசைப்படி பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு www.centacpuducheryy.in என்ற சென்டாக் இணையதளத்தை பார்க்கவும்.இத்தகவலை, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.
No comments: