Breaking

இன்றைய ராசி பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.. 24-07-2020






இன்றைய ராசி பலன்கள் பற்றி
தெரிந்து கொள்வோம்..
24-07-2020, ஆடி 09, வெள்ளிக்கிழமை.

இராகு காலம் - பகல் 10.30-12.00

எம கண்டம்- மதியம் 03.00-04.30

குளிகன் காலை 07.30 -09.00.


மேஷம்

பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக கொடுக்கல்-வாங்கல் லாபகரமாக இருக்கும்.

ரிஷபம்

எடுத்த காரியங்கள் வெற்றி பெற சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது.எதிர்பாராத செலவுகள் பண நெருக்கடிகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

மிதுனம்

குடும்பத்தில் மங்கல நிகழ்வுகள் நடைபெறும். ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் தேவைகளுக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எந்த செயலிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் நண்பர்கள் ஒத்துழைப்போடு செயல்படுவீர்கள்.

கடகம்

வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகளால் முன்னேற்றம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். மேலதிகாரிகளால் இடையூறுகள் ஏற்படலாம்.


சிம்மம்

புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் பலனை கொடுக்கும். வியாபாரத்தில் அமோகமாக லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

கன்னி

உடல் சோர்வு ஏற்படலாம். ஆதாயம் கிடைக்கும். பணப் பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

துலாம்

புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பூர்வீக சொத்துக்களால் நற்பலன்கள் உண்டு. பிள்ளைகள் பெருமைப்படும் படி நடந்து கொள்வார்கள். சுபச் செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்

தொழில் முன்னேற்றத்திற்காக முயற்சிகள் அனைத்தும் நற்பலனை கொடுக்கும். வருமானம் இரட்டிப்பாகும். ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். வேளையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள்.


தனுசு

வியாபாரம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொன் பொருள் சேரும்.

மகரம்

உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் ஏற்படலாம். தேவையில்லாத மனக் கவலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தள்ளி வைக்கவும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்.

கும்பம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

மீனம்

பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிப்பு குறையும். இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

No comments:

Powered by Blogger.