Breaking

+2 முடித்த மாணவர்கள் சிறந்த துறையை தேர்ந்தெடுக்க சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி-தினமலர்






தினமலர்' மற்றும் 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' இணைந்து வழங்கும், டிசைனிங் துறை சார்ந்த படிப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்த சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி, இன்று நடக்கிறது.'ஆன்லைன்' வாயிலாக, இன்று காலை 10:30 மணிமுதல் 12:30 மணிவரை நடைபெற உள்ள இந்த பிரத்யேக 'வெபினார்' நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, டாட் ஸ்கூல் ஆப் டிசைன் தலைவர் ராமநாதன், காஸ்ட்யூம் டிசைனர் அம்ரிதாராம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.ஊரடங்கு காலத்தில், மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் வகையில், உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை, ஆன்லைன் வாயிலாக 'தினமலர்' தொடர்ந்து வழங்கி வருகிறது.


அதன் ஒரு பகுதியாக, இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், டிசைனிங் துறையில் உள்ள பல்வேறு படிப்புகள், சிறந்த கல்வி நிறுவனங்கள், தேவையான தகுதி கள், எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள், உதவித்தொகை விபரங்கள், வேலை வாய்ப்புகள் உட்பட மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும், கல்வியாளர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.இந்த ஆன்லைன் நேரலை நிகழ்ச்சியில் பங்குபெற, www.kalvimalar.com என்ற இணையதளத்தில், மாணவர்கள், தங்களது பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம். 

இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் இலவசமாக பங்கேற்கலாம். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும், டாட் ஸ்கூல் ஆப் டிசைன் நடத்தும் சி.க்யூ.டி., எனும், 'கிரியேட்டிவ் குவாசண்ட் டெஸ்ட்' எழுதும் வாய்ப்பை பெறலாம்.அதன் வாயிலாக, உயர் கல்வி கட்டணத்தில், 75 சதவீதம் வரை உதவித்தொகை பெற வாய்ப்புள்ளது..

No comments:

Powered by Blogger.