Breaking

+2 பொதுத்தேர்வு.. மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம்..





+2 பொதுத்தேர்வு..
மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம்..

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கிய மார்ச் 24ம் தேதி முடிவடைந்தது. அன்றைய தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாதால் 36,000 மாணவர்களால் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு வரும் 27ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜூன் 10ம் தேதியுடன் அனைத்து மையங்களிலும், 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது.

இந்நிலையில், மார்ச் 2020ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச் ஜூன் பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020 பருவத்தில் எழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மாணாக்கர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி விகிதத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தையும் கோவை மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.


மாவட்ட வாரியாக விகிதம் பின்வருமாறு..

திருப்பூர் - 97.12%
ஈரோடு - 96.99%
கோவை - 96.39%
சென்னை - 93.45%
காஞ்சிபுரம் - 90.62%
திருவள்ளூர் -91.16%
கன்னியாக்குமரி - 95.06%
திருநெல்வேலி - 95.01%
தூத்துக்குடி - 94.84%
ராமநாதபுரம் - 93.12%
சிவகங்கை - 95.65%
விருதுநகர் - 96.26%
தேனி - 90.63%
மதுரை - 94.42%
திண்டுக்கல் - 93.13%
ஊட்டி - 92.02%
சேலம் - 92.38%
நாமக்கல் - 96.06%
கிருஷ்ணகிரி - 87.08%
தர்மபுரி - 90.80%
புதுக்கோட்டை - 93.26%
கரூர் - 94.51% அ
ரியலூர் - 94.41%
பெரம்பலூர் - 95.40%
திருச்சி - 95.94%
நாகப்பட்டினம் - 87.10%
திருவாரூர் - 88.45%
தஞ்சாவூர் - 92.89%
விழுப்புரம் - 86.98%
கடலூர் - 86.33%
திருவண்ணாமலை - 87.77%
வேலூர் - 87.42%
காரைக்கால் - 86.21%
புதுச்சேரி - 92.26%.

No comments:

Powered by Blogger.