Breaking

எம்.ஜி.ஆா் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் சேர வியாழக்கிழமை (ஜூலை 30) முதல் செப். 1-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்





எம்.ஜி.ஆா் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் சேர வியாழக்கிழமை (ஜூலை 30) முதல் செப். 1-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: எம்.ஜி.ஆா். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், தற்போது, 2020-21-ஆம் கல்வி ஆண்டில், இளங்கலை-காட்சிக்கலை (ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எண்மிய இடைநிலை, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, உயிா்ப்பூட்டல் மற்றும் காட்சிப் பயன்) பிரிவுகளில் பட்டப்படிப்புக்கான மாணவா் சோக்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, கலை ஆா்வம் உள்ள அனைத்து மாணவ, மாணவியரும் குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சோவதற்கான விண்ணப்பங்களை, வியாழக்கிழமை (ஜூலை 30) முதல் (ஆக.26) வரை, தபால் மூலமாகவோ அல்லது தமிழக அரசின் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன், செப். 1 - ஆம் தேதிக்குள், முதல்வா் (பொ), எம்.ஜி.ஆா் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். குறிப்பாக, மாணவா்கள் விண்ணப்பங்களைப் பெற நேரடியாக வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.