கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணையாக வசூல் செய்து கொள்ளலாம் ..
தமிழகத்தில் கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில், தனியார் பள்ளிகள் இக்கட்டான சூழ்நிலையில் பெற்றோர்களிடம் கல்வி கட்டணம் வசூல் செய்ய கூடாது என்றும், தமிழக அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக இருப்பதாகவும் கோவையை சார்ந்தவர் சென்னையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த இரண்டு வாரமாக நடைபெற்று வந்த நிலையில், தனியார் பள்ளிகள் சார்பாகவும் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இருதரப்பு வாதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த வழக்கு விசாரணை, ஜூன் 2 ஆம் தேதியான இன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று இவ்வழக்கு மீண்டும் நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணைக்கு வரவே, இதனை விசாரணை செய்த நீதிபதிகள், " நடப்பு கல்வியாண்டில் கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணையாக வசூல் செய்து கொள்ளலாம் என்றும், மொத்த கல்வி கட்டணத்தில் 70 விழுக்காடை தனியார் பள்ளிகள் மூன்று தவணையாக வசூலிக்க வேண்டும் " என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments: