Breaking

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்குரிய வட்டி விகிதம் 7.1 சதவீத அளவிலேயே தொடரும்





அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்குரிய வட்டி விகிதம் 7.1 சதவீத அளவிலேயே தொடரும் என்று நிதித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகித அளவு நிா்ணயம் செய்யப்படும். அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நிதியாண்டின் முதல் காலாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வட்டி விகிதத்தின் அளவு அதே 7.1 சதவீதமாகத் தொடரும் என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

No comments:

Powered by Blogger.