Breaking

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளி ஆசிரியர்களும் அவரவர் இல்லத்தில் இருந்து அறவழியில் ஒருநாள் உண்ணாவிரதம்..




நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளி ஆசிரியர்களும் அவரவர் இல்லத்தில் இருந்து அறவழியில் ஒருநாள் உண்ணாவிரதம்..

10.07.2020, வெள்ளிக்கிழமை

இன்று காலை 10மணி முதல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளி ஆசிரியர்களும் அவரவர் இல்லத்தில் இருந்து அறவழியில் ஒருநாள் உண்ணாவிரதத்தினை  நடத்திக் கொண்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் அதிகமான தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் உள்ளனர்.

அவர்களின் துயரினைப் போக்கும் வகையில்  ஆசிரியர்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டி #saveprivateschoolteachers
என்ற வாசகத்தை அனைத்துச் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுக் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அவர்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்குமாறு தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின்( பதிவு எண் :30/2018). 
நாமக்கல் மாவட்டம் சார்பில்   அம்மாவட்டத்தின் தலைவர் M. ஜெயபால்,செயலாளர்     க. சிவநாதன்  முதன்மை ஆலோசகர் செல்வராஜ் மற்றும் பொருளாளர் நிர்வாகிகள் ஆகியோர் கோரிக்கை வைத்தார்கள்.

No comments:

Powered by Blogger.