இன்ஸ்பையர் விருது-பள்ளிி மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைவா..
இன்ஸ்பையர் விருது-பள்ளிி மாணவர்கள் ஆன்லைனில்
பதிவு செய்ய பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைவா..
பள்ளி மாணவ, மாணவியர் இடையே, அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க, ஆண்டுதோறும், 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்படுகிறது. இதற்காக, திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியருக்கு, தலா, 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், அவர்கள், தங்கள் அறிவியல் படைப்புகளை உருவாக்கி, மாவட்ட, மாநில அளவில், கண்காட்சியில் காட்சிப்படுத்த வேண்டும். சிறந்த படைப்பு தேர்வு செய்யப்பட்டு, இன்ஸ்பயர் விருது, பரிசுகள் வழங்கப்படுகின்றன. கொரோனா சூழலால், நடப்பு கல்வியாண்டில், விருதுக்கான போட்டி உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, விருதுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது.
தமிழகத்தில், அரசு பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தனியார் பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், இதுகுறித்த விபரம் கூட, அரசு பள்ளி மாணவ, மாணவியரை சென்றடையவில்லை. இதனால், நடப்பு கல்வியாண்டில், இப்போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, அரிதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், இத்திட்டத்தில் மாணவர்களை பங்கேற்க செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
No comments: