Breaking

கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது..





கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது..

நீங்கள் கடலுக்கு சென்றிருந்தால் உங்களுக்கு கடல் நீர் உவர்ப்பாக இருக்கும் என்பது கண்டிப்பாக தெரிந்திருக்கும். மழை, ஆறுகள் மற்றும் பனிஆகியவற்றில் கூட தான் நீர் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் உப்பு கரிக்கவில்லையே என்ற கேள்வியும் உங்களுக்கு எழலாம். ஆனால் இந்த கடல் நீர் மட்டும் ஏன் உப்பு கரிக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு அப்பப்போது தோன்றும். ஆனால், அதை தெரிந்துகொள்வதையெல்லாம் விட உங்களுக்கு பெரிய வேலைகள் எல்லாம் இருப்பதால், அதை அப்படியே மறந்துவிடுகிறீர்கள். சரி, இப்போது அதை நீங்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தால்.. இந்த சிறிய பதிவை படியுங்கள். எளிமையாக இதற்கான விளக்கத்தைப் பார்த்துவிடலாம். (why sea water is salty in tamil wikipedia)

கடல் நீர் உப்பாக இரண்டு காரணங்கள் உண்டு: ஒன்று நிலத்திலிருந்து சென்று கடலில் சேரும் நீர் மற்றும் இரண்டாவது கடற்பரப்பில் உள்ள துவாரங்கள். (why sea water is salty in tamil)


நிலத்தில் இருந்து கடல் சேரும் நீர்
கடல் நீரின் உப்புத்தன்மைக்கு முக்கியமான ஆதாரம் நிலத்தில் உள்ள பாறைகள் என்றால் உங்களால் நம்பமுடியுமா? ஆமாங்க, அது தான் உண்மையும் கூட. (sea water salty)

வானிலிருந்து நிலத்தில் விழும் மழைநீர் சற்று அமிலத்தன்மை உடையது, எனவே அது பாறைகளில் விழும்போது அரிப்புக்கு காரணமாகிறது. நீரோடைகள் மற்றும் ஆறுகளில் ஓடும் நீர் பாறைகளிலிருந்து அரிக்கப்ட்டு வெளியான தாதுக்கள் மற்றும் அதில் உள்ள அயனிகளை இறுதியில் கடலுக்கு கொண்டு சேர்க்கிறது. குறிப்பிட்ட அளவிலான கரைந்த அயனிகள் மற்றும் தாதுக்கள் பல கடல்வாழ் உயிரினங்களால் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் மீதம் உள்ளவை அப்படியே நீரிலிலேயே தங்கிவிடுகின்றன. எனவே, தொடக்கத்தின் முதல் பல்லாயிரம் வருடங்களாக இது தொடர்ந்து நடைபெறுவதால் உப்புதன்மை கடலில் சேர்ந்து விடுகிறது.

அப்போ, ஆறு, குளம், ஏறி ஆகியவற்றில் உள்ள நீர் ஏன் உப்புக்கரிக்கவில்லை என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம், அவையும் உப்புத்தன்மை உடையவைதான். ஆனால், சிறிய அளவே உப்பு இருப்பதனால் அதை நம்மால் உணர முடியவில்லை. அதுவே அடித்து செல்லப்பட்டு கடலில் பல்லாயிரம் வருடங்களாக சேர்ந்து இருப்பதால், கடல் நீர் உவர்ப்பு சுவை கொண்டதாக மாறிவிட்டது.

கடற்பரப்பில் உள்ள துவாரங்கள்
கடலில் உள்ள உப்புக்கான மற்றொரு ஆதாரம் கடற்பரப்பில் உள்ள துவாரங்களிலிருந்து வெளியாகும் Hydrothermal fluids எனப்படும் நீர்மவெப்பஆற்றல் திரவங்கள் ஆகும்.

முதலில் கடல் நீர் கடலின் அடிப்பகுதியில் இருக்கும் துவாரங்கள் வழியே அதனுள் செல்லும். அப்படி செல்லும் கடல் நீர் பூமியின் மையத்திலிருந்து வெளியாகும் பாறைகளில் இருந்து வெளியாகும் நெருப்புக்குழம்பான மக்மாவால் வெப்பப்படுத்தப்படுகிறது. வெப்பம் தொடர்ச்சியான இரசாயன எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது.


அதனால், நீர் ஆக்ஸிஜன், மெக்னீசியம் மற்றும் சல்பேட்டுகளை இழந்து, சுற்றியுள்ள பாறைகளிலிருந்து இரும்பு, துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களை பெறுகிறது. சூடான நீர் கடற்பரப்பில் உள்ள மற்ற வேறுசில துவாரங்கள் வழியாக வெளியிடப்படுகிறது. ஆனால், இப்போதோ அதனுடன் உலோகங்களையும் கொண்டுள்ளது. சில கடல் உப்புகள் நீருக்கடியில் எரிமலை வெடிப்பிலிருந்து வருகின்றன, அவை நேரடியாக தாதுக்களை கடல் நீருடன் கலந்து விடுகின்றன.

கடல்நீரில் அதிகம் காணப்படும் இரண்டு அயனிகள் குளோரைடு மற்றும் சோடியம் ஆகும். கடலில் கரைந்துள்ள அனைத்து அயனிகளில் இது 85 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. மெக்னீசியம் மற்றும் சல்பேட் மொத்தத்தில் 10 சதவிகிதம் மட்டுமே ஆகும். மற்ற அயனிகள் மிகச் சிறிய செறிவுகளிலேயே காணப்படுகின்றன.

கடல்நீரில் உள்ள உப்பு செறிவு அதாவது உப்புத்தன்மை ஆனது வெப்பநிலை, ஆவியாதல் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். உப்புத்தன்மை பொதுவாக பூமத்திய ரேகை மற்றும் துருவங்களில் குறைவாகவும், நடு அட்சரேகைகளில் அதிகமாகவும் இருக்கும். சராசரி உப்புத்தன்மை ஆயிரத்திற்கு 35 பாகங்கள் ஆகும்.

மழை நீர் ஏன் உப்பாக இல்லை?

அடுத்தது, அப்போ மழை நீர் ஏன் உப்பாக இல்லை என்ற கேள்வி எழலாம். ஏனென்றால், கடல்நீர் தானே மழையாக வருகிறது என்று நாம் படித்திருப்போம். கடல் நீர் ஆவியாகும் போது, உப்பு கடலிலேயே தங்கிவிடுகிறது, நீர் மட்டும் ஆவியாகி சென்று மழைப்பொழிகிறது. இது தான் கடல்நீர் தொடர்ந்து உப்பாகவே இருக்க காரணம்.

No comments:

Powered by Blogger.