Breaking

மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.. ஜேஇஇ மெயின், என்டிஏ தேர்வுகளுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்த மீண்டும் வாய்ப்பு..





மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு..
ஜேஇஇ மெயின், என்டிஏ தேர்வுகளுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்த மீண்டும் வாய்ப்பு..

ஜேஇஇ மெயின், என்டிஏ தேர்வுகளுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்த மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஜூலை 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற இருந்தது. எனினும் கரோனா சூழல் காரணமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல யூபிஎஸ்சி நடத்தும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வும் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளின் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில், ஜேஇஇ, என்டிஏ தேர்வுகளுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்த மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜூலை 31-ம் தேதி வரை, மாணவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தைத் திருத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.