Breaking

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு..






அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு..

மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

உள்ஒதுக்கீடு மூலம் சுமார் 500 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும்.மேலும் அமைச்சரவை கூட்டத்தில், 5 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்யும் 6 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.