பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க, அனுமதி..
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க, அனுமதி..
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், 1997 முதல், 2000ம் ஆண்டு வரையிலான, பின்னடைவு காலியிடங்களில், உயர்கல்வி தகுதியுள்ளவர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க அனுமதி வழங்கப்பட்டது.
அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள், எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.எட்., படித்திருந்தால், அவர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்தது.
தற்போது, நிபந்தனைகளுக்கு தளர்த்தப்பட்டு, உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க, பள்ளி கல்வி மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments: