Breaking

தமிழகத்தில் பள்ளி திறப்பது எப்போது என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை ....





தமிழகத்தில் பள்ளி திறப்பது எப்போது என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை ....

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மாவட்ட வாரியான பாதிப்புகள், கடந்த சில வாரமாக கடுமையான அளவு உச்சம் பெற்றுள்ளது. தமிழகத்தின் கொரோனா பாதிப்பை பொறுத்த வரையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,663 ஆக உயர்ந்துள்ளது. 1,62,691 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர்.கொரோனா ஊரடங்கு ஆறாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏழாவது முறையாக நீட்டிப்பு ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பள்ளி மாணவர்களின் எதிர்காலம் என்ன என்ற பெரிய கேள்விக்குறி இருக்கும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளி திறப்பது எப்போது என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தலைமை செயலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை எப்படி?, இணையதள வகுப்புகளின் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.