Breaking

கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் உடனடியாக பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை-நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்..




கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் உடனடியாக பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை-நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்..

கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் தை (சனவரி) மாதத்திற்கு முன்பு பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் தை (சனவரி) மாதத்திற்கு முன்பு பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதையும் அலைகழித்துக் கொண்டிருக்கிறது. உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உருவாக்கும் ஆராய்ச்சியில் மருத்துவ வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இதுவரையில் நம்பகமான தடுப்பு மருந்து உருவாக்கப்படவில்லை. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ண எல்லா என்பவர் ஐதராபாத்தில் பாரத் பயோடெக் என்ற ஒரு நிறுவனத்தைச் சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பல்வேறு நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் உருவாக்கிய அனுபவம் உடையது. இந்த நிறுவனம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான கோவேக்சின் என்றழைக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.


சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனை உட்பட இந்தியா முழுவதும் உள்ள 12 மருத்துவமனைகளில் சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த கோவேக்சின் தடுப்பு மருந்து இந்திய விடுதலை நாளில் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில்- தடுப்பு மருந்துகள் என்பவை, அந்தந்த நோயிக்கான நச்சுகளால் உருவாக்கப் படுவது என்கிற காரணியம் பற்றி, இதை உடனடியாக எடுத்தேன் கவிழ்தேன் என்று பரிசோதித்து விட முடியாது. இந்த ஆராய்ச்சிக்கு தங்களை ஒப்புக்கொடுக்கிற நபர்கள் பாதித்து விடாமல், இந்த பரிசோதனையைப் படிப்படியாக முன்னெடுக்க வேண்டும். அதற்கான உலக மருத்துவ விதிமுறையும் இருக்கிறது. எனவே அவசர கதியில் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது ஆபத்து என்று மருத்துவ வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பு மருந்து இந்திய விடுதலை நாளன்று அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்திருந்தது. உடனடியாக தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது ஆபத்து என்று மருத்துவ வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்- நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவேக்சின், எதிர் வரும் தை (சனவரி) மாதத்திற்கு முன்னதாக பொதுமக்கள் பயன்பாட்டுவராது' என்று தெரிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.