Breaking

தனியார் பள்ளிகள் நாளை வரை எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது.. மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் உத்தரவு





தனியார் பள்ளிகள் நாளை வரை எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது.. மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடபட்டுள்ளன. மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கபடும் என தெரியாத சூழ்நிலைதான் தற்போது நிலவி வருகிறது. பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும் சில தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில், தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க தடை தமிழக அரசு விதித்தது.


இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கானது நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அதில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நாளை தமிழக அரசு பதில் அளிக்க உள்ளது. இந்நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் சார்பில் இன்று வெளியிடபட்டுள்ள அறிவிப்பில் தனியார் பள்ளிகள் நாளை வர எந்த விதமான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது என தெரிவித்துள்ளது.
மேலும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முடிவு தெரிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.