Breaking

செமஸ்டர் தேர்வுகள் ரத்து.. அறிவிப்பை வெளியிட்டார் டெல்லி துணை முதல்வர்..





செமஸ்டர் தேர்வுகள் ரத்து.. அறிவிப்பை வெளியிட்டார் டெல்லி துணை முதல்வர்..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாடு முழுவதும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து இதுவரை எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே, பல்கலை., இறுதி ஆண்டு தேர்வுகள் வரும் செப்., இறுதிக்குள் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோசிடியா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலை.,யும் இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலை., அளிக்கம் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.