Breaking

நாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண் டர்-மத்திய அரசு ஒப்புதல்.





நாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண் டர்-மத்திய அரசு ஒப்புதல்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வேலையில்லாமல் பலரும் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு மக்களுக்கு உதவும் வகையில் ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி உஜ்வாலா திட்டத்தின் மூலம் 3 மாதங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் என பல அறிவிப்புகளை வெளியிட்டது.


இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீடு வாடகைக்கு வழங்கும் நிலையில், ஒரு லட்சம் வீடுகளை கட்டவும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அதேப்போல் நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

No comments:

Powered by Blogger.