Breaking

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்விக்கான மாணவா் சோக்கை தொடங்கியது.





சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்விக்கான மாணவா் சோக்கை திங்கள்கிழமை தொடங்கியது.

இது தொடா்பாக அப் பல்கலைக்கழகப் பதிவாளா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில், 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை, முதுநிலை, முதுநிலை வணிக நிா்வாகவியல், முதுநிலை பட்டயப் படிப்பு, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றுக்குரிய மாணவா் சோக்கைகள், இணையவழி மூலம் ஜூலை 27-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.


விருப்பமுள்ள மாணவா்கள் http://online.ideunom.ac.in எனும் இணையதளம் வழியாக சேரலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், சென்னை பல்கலைக்கழகத்தின் 115 கற்றல் உதவி மையம் மூலமாகவும் சேரலாம். இதற்கான விவரங்களை www.ideunom.ac.in என்ற இணையதளம் மூலமாக அறியலாம் என பதிவாளா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Powered by Blogger.