Breaking

அரசு பள்ளி மாணவர் களுக்கு அரிசி மற்றும் ரொக்கப் பணம் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.. பாண்டிச்சேரி





அரசு பள்ளி மாணவர் களுக்கு அரிசி மற்றும் ரொக்கப் பணம் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் கடைசி வாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் குறையாததால் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை; எப்போது திறக்கப்படும் என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இதன் காரணமாக, அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மதிய உணவுக்காக வாங்கப்பட்டுள்ள அரிசியை மாணவர்களுக்கே வழங்க அரசு முடிவு செய்துள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப் பட உள்ள புதிய திட்டம் குறித்து கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:


அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
எனவே, அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாணவருக்கும் தலா 4 கிலோ அரிசி வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.மளிகை பொருட்களுக்கு பதிலாக 250 ரூபாயில் இருந்து, 330 ரூபாய் வரை ரொக்கமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு பள்ளிகளில் படிக்கும் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் பணி அரசு பள்ளிகளில் நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன், மாணவர்களுக்கு அரிசி, ரொக்கப் பணத்தை அந்தந்த பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் வழங்குவர்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

No comments:

Powered by Blogger.