செமஸ்டர் தேர்வுகள் ரத்து.. மதிப்பெண்கள் கணித முறையை அறிவித்த தமிழக அரசு..
செமஸ்டர் தேர்வுகள் ரத்து.. மதிப்பெண்கள் கணித முறையை அறிவித்த தமிழக அரசு..
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. அதன் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாத நிலை நிலவியது. இருப்பினும் செமஸ்டர் தேர்வுகளை நடத்த யு.ஜி.சி அறிவிப்பை வெளியிட்டது.
செப்டம்பர் மாதத்தில் கல்லூரி தேர்வுகள் நடத்த வழிகாட்டுதல்களையும் யு.ஜி.சி வெளியிட்டு இருந்த நிலையில் பல மாநில அரசுகள் தேர்வுகளை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து குறித்த அரசானை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு குறித்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு பருவத்தில் அக மதிப்பீட்டில் இருந்து 70% மதிப்பெண்களும், சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 30% மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இவற்றை வைத்து முதன்மை, மொழி பாடங்களுக்கு மதிப்பெண் அளிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்முறை தேர்வு நடத்தபடாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் உள்ல மாணவர்கள் தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.
No comments: