Breaking

நமது உடலில் ஏற்படும் அரிப்பு நீங்க இயற்கை வைத்திய முறை






உடலில் ஏற்படும் அரிப்பு நீங்க 

குப்பைமேனி செடியின் இலைகள், சிறிது மஞ்சள், சிறிது கல்லுப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து அரிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி அது காய்ந்த பின் குளித்து வர அரிப்பு குணமாகும்.*

* வேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனுடன் 3 வெங்காயம் சேர்த்து அரைத்து அரிப்புள்ள இடங்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் குளித்தால் அரிப்பு நீங்கும்.*

* 20 கிராம் நன்னாரி வேரை அரை லிட்டர் தண்ணீரில் நன்றாக காய்ச்சி, அது 200 மில்லி அளவாக சுண்டியதும் காலையில் 100 மில்லி மாலையில் 100 மில்லி அளவு குடித்து வர அரிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான தோல் வியாதிகளும் நீங்கும்.*



*அருகம்புல் அரைத்து சாறாக குடித்தும், அதில் சில துளிகளை அரிப்புள்ள இடங்களில் பூசி வரவும் அரிப்பு குணமாகும்.*

கற்றாழை இதன் வெளிப்புற தோலை நீக்கி உள்ளே கொழகொழவென இருக்கும் பகுதியை எடுத்து தோலில் பாதிப்பேற்பட்ட இடங்களில் பூச அரிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்*

சோப்புத் தேய்க்காமல் இயற்கை குளியல் பொடி தேய்த்துக் குளிப்பது நல்லது.
கைப்பிடி அறுகம்புல்லை ஒன்றிரண்டாக வெட்டி, 10 மிளகைப் பொடித்து, நான்கு வெற்றிலைகளைக் காம்பு நீக்கிக் இந்த மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு குவளை நீர்விட்டுக் கொதிக்கவைத்து அரை டம்ளராக வற்றியதும், வடிகட்டி அந்தக் கஷாயத்தை இளஞ்சூட்டில் காலை, மாலை என 15 தினங்கள் பருகினால், `அர்ட்டிகேரியா’ எனும் உடல் முழுக்க வரும் அரிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம்.*

No comments:

Powered by Blogger.