Breaking

இளம் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு,கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.





இளம் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில்  ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு,கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.*  பள்ளிக்கல்வித்துறையின் ஜே.ஆர்.சி அமைப்பு சார்பில் ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கு முகக்கவசங்கள்,கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட ஜே.ஆர்.சி கன்வீனர் பிரபாகர் அறிவுரையின் படி, ஜே.ஆர்.சி ஆலோசகர் ஜோசப்ராஜ் மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கினார். உடன் வட்டார கல்வி அலுவலர் திரு. முனியப்பன்,திரு.ரவிக்குமார்  ஆசிரியர் ஆகியோர் உடனிருந்தனர்.பின்னர் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கபசுரக்குடிநீர் பருக வேண்டும், அரசு கூறும் அறிவுரைபடி நடக்க வேண்டும் என  அறிவுரை கூறினார்.

No comments:

Powered by Blogger.