Breaking

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரிசி பருப்பு வழங்கப்படும் தமிழக அரசு





அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரிசி பருப்பு வழங்கப்படும் தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருவதால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கான அரிசி, பருப்பு போன்றவை பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. பள்ளிகள் அனைத்தும் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் சத்துணவுக்கான உணவு தானியங்களை, மாணவர்களுக்கே வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.


அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள், அதாவது 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து, சத்துணவுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்குரிய அரிசி, பருப்பு போன்றவற்றை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் அரிசி, பருப்புகள் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தர விட்டுள்ளது

No comments:

Powered by Blogger.