Breaking

செமஸ்டர் மற்றும் நுழைவுத் தேர்வுகள் நடத்துவது உறுதி.. வழிகாட்டுதலை வெளியிட்டது மத்திய அரசு..




செமஸ்டர் மற்றும் நுழைவுத் தேர்வுகள் நடத்துவது உறுதி..
வழிகாட்டுதலை வெளியிட்டது மத்திய அரசு..

நாடு முழுவதும் உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது குறித்த வழிகாட்டு முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டு விட்டது.


இதனிடையே, கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கல்லூரி தேர்வுகள், நீட் மற்றும் பொறியியல் நுழைவு தேர்வுகளை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடி தேர்வாகவோ நடத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பல்கலை., இறுதி தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் சிறப்புத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.