Breaking

அகவிலைப்படி நிறுத்தம்.. முதல்வர் நாராயணசாமி




அகவிலைப்படி நிறுத்தம்.. முதல்வர் நாராயணசாமி

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த ஜூன் மாதம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது' என, முதல்வர் நாராயணசாமி கூறினார்.பட்ஜெட் தாக்கல் முடிந்த பின், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக அரசு கொறடா அனந்தராமன் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து முதல்வர் நாராயணசாமி பேசும்போது, 'நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் அரசு ஊழியர்களுக்கு முழுமையான சம்பளத்தை வழங்கி வருகிறோம். பெரிய மாநிலங்களில் சம்பளத்தை குறைத்தபோதும், புதுச்சேரியில் சம்பளமும், ஓய்வூதியமும் முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது.அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அடுத்த ஜூன் வரை நிறுத்தி வைத்துள்ளது.
அதனால், புதுச்சேரியிலும் அதை பின்பற்ற வேண்டியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த ஜூன் வரை நிறுத்தி வைக்கப்படும்.நிதி நெருக்கடி காரணமாக ஓய்வு பெறுபவர்களுக்கு பணப் பலன்கள் வழங்குவது சிரமாக உள்ளது. இருந்தபோதும், பட்ஜெட் திருத்திய மதிப்பீட்டில் வழங்கப்படும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.

No comments:

Powered by Blogger.