Breaking

இன்றும் நாளையும் வானில் அதிசயம்.. இந்த அரிய நிகழ்வை பாருங்கள்.





இன்றும் நாளையும்
வானில் அதிசயம்..
இந்த அரிய நிகழ்வை
பாருங்கள்.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை வருடந்தோறும் வானத்தில் நிகழ்வது என்பது வழக்கம் தான். ஆனால் மக்கள் இதை அதிசயமாக நினைத்து ஆர்வமுடன் பார்ப்பார்கள். இந்நிலையில் நாம் நம் வாழ்வில் எளிதில் பார்க்க முடியாத ஓர் அற்புத நிகழ்வு தான் வால் நட்சத்திரம்.

நம்மில் பலரும் சிறு வயது முதல் வால் நட்சத்திரத்தை பற்றி பல வகையாக கேள்வி பட்டிருப்போம். ஆனால் அதை யாரும் எளிதில் பார்த்திருக்க முடியாது. வால் நட்சத்திரம் என்பது உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசி ஆகியவற்றின் அண்ட பனிப்பந்துக்கள் தான் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் இன்றும் நாளையும் இந்திய மக்கள் வானில் வால் நட்சத்திரத்தை காண முடியும் என்று நாசா அறிவித்து உள்ளது.
மேலும் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இந்த வால் நட்சத்திரத்திற்கு நியோவைஸ் கோமேட் 2020 என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், இந்தியா முழுவதும் இன்றும், நாளையும் வால்நட்சத்திரம் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்தியாவில் இன்று அதிகாலை மக்களுக்கு தொலை தூரத்தில் தெரிந்திருக்கும் என்றும் நாளை சூரியன் மறைந்த பிறகு வடமேற்கு திசையில் அடிவானத்தில் வால் நட்சத்திரம் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தொலை தூரத்தில் உள்ள இந்த வால் நட்சத்திரம் வருகின்ற ஜூலை 22 அம தேதி அன்று பூமிக்கு அருகில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Powered by Blogger.