Breaking

இன்றைய ராசிபலன் பற்றி அறிவோம்..





இன்றைய ராசிபலன் பற்றி அறிவோம்..

14-07-2020, ஆனி 30, செவ்வாய்க்கிழமை.
இராகு காலம் மதியம் 03.00-04.30
எம கண்டம் காலை 09.00-10.30
குளிகன் மதியம் 12.00-1.30

மேஷம்

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பழைய வராத கடன்கள் வசூலாகும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.

ரிஷபம்

வீட்டுத் தேவைகள் பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடலாம்.உணவு விஷயத்தில் கவனம் தேவை. எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்
சொல்லும் வேலைகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தில் மனைவியால் நல்லது நடக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கடகம்
குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.


சிம்மம்
பணியாட்கள் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதம் உண்டாகலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

கன்னி
மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பயணங்களை தவிர்க்கவும். மற்றவரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

துலாம்
திடீர் பணவரவு உண்டாகும். காலையிலேயே மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். தொழில் தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்
பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். நண்பர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.


தனுசு
செய்யும் வேலைகளில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்களால் முன்னேற்றம் உண்டு. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

மகரம்
அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகலாம். பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டு.

கும்பம்
சுப காரியங்கள் கைகூடும். வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மனக்கசப்புகள் மறையும். வியாபாரத்தில் நண்பர்கள் ஒத்துழைப்பால் அனுகூலமான பலன் உண்டு.

மீனம்
பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு. சுபகாரியங்கள் கைகூடும். ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

No comments:

Powered by Blogger.