Breaking

சில முக்கியமான வீட்டு மருத்துவ குறிப்புகள் பற்றி அறிவோம்




சில முக்கியமான வீட்டு மருத்துவ குறிப்புகள்  பற்றி அறிவோம்

உளுந்தம் பருப்பை புளித்த மோரில் ஊற வைத்து, நன்கு ஊறிய பிறகு அரைத்து வடிகட்டி நெய்யில் வேக வைத்து எடுக்க வேண்டும். இந்த வடையை தேனில் தொட்டு சாப்பிட்டால் வாதம், கபம் ,பித்த நோய் குணமடையும்.காய்ந்த கறிவேப்பிலை, மிளகு, உப்பு, சுக்கு முதலியவைகளை கலந்து பொடி செய்து சாதத்துடன் சிறிது நெய் கலந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.மாம்பழத்தை கசக்கி சாறு எடுத்து வடிகட்டி பாலுடன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும். ரத்தசோகை நோய்க்கு வெள்ளரிக் காயை சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் சத்து உடலுக்குக் கிடைக்கும்.வியர்வை நாற்றம் போக தினந்தோறும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.குளிக்கும்போது பாசிப்பருப்பு மாவு தேய்த்து குளிக்க வேண்டும்.தலையில் பொடுகு இருந்தால் வெள்ளை கசகசாவை பாலில் ஊறவைத்து, மிளகு சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்தால் பொடுகு நீங்கிவிடும்.உப்பு கலந்த நீரில் கால் நகங்களை 10 நிமிடங்கள் ஊற வைத்து பிரஷினால் தேய்த்தால் அழுக்குகள் நீங்கிவிடும்.


வேப்பங் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்ணில் வைத்தால் காயம் விரைவில் ஆறும்.வயிற்றுப் புண் , குடல் புண் இவற்றிற்கு நெல்லி ரசம் சிறந்த மருந்து. இந்த ரசத்தை புளிப்பில்லாத தயிர் அல்லது மோரில் கலந்து குடித்தால் விரைவில் குணம் கிடைக்கும்.காது ,மூக்கு ,நாக்கு இவற்றில் கொப்புளங்கள் ஏற்பட்டால் சிறிது க்ளிசரின் வைத்து பஞ்சு மூலம் தேய்த்து எடுத்தால் அவை மறைந்துவிடும்.கிளிசரின்
 ,சர்க்கரை இவற்றை சேர்த்து உள்ளங் கைகளை அடிக்கடி தடவி வந்தால் கைகள் மிருதுவாக இருக்கும்.பச்சை மிளகாயை வெந்நீரில் இட்டு சற்று நேரம் கழித்து சமையலுக்கு பயன்படுத்தினால் அல்சர் வராது.உருளைக்கிழங்கை பச்சையாக சாப்பிட்டால் அல்சர் குணமாகும். கிராம்பை வெந்நீரில் ஊறவைத்து வடிகட்டி காலை மாலை வேளைகளில் பருகி வந்தால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தி கட்டுப்படும்.வாயில் புண் ஏற்பட்டால் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளித்து சிறிது நேரம் சென்றதும் துப்பி விடுங்கள். ஒரு நாளைக்கு 3 முறை செய்தால் வாய்ப்புண் குணமாகும்.சளியோடு கூடிய சுரம்,மண்ணீரல் வீக்கம் ,அஜீரணம் போன்றவைகளுக்கு இது ஒரு கசாயம்.சுக்கு, மிளகு, திப்பிலி அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து தூள் சேர்த்து கஷாயமாக்கி குடிக்க வேண்டும். அரை வாளி இளம் சூடான நீரில் 50 கிராம் உப்பை போட்டு கிளறி 10 நிமிடம் வரை கால்களை வைத்து வந்தால் கால்வலி நீங்கும்.

No comments:

Powered by Blogger.