நாளை நிகழ உள்ள சந்திர கிரகணத்தை பார்க்க தொடர்பு எண் மூலம் அறிய வாய்ப்பு..
நாளை நிகழ உள்ள சந்திர கிரகணத்தை பார்க்க தொடர்பு எண் மூலம் அறிய வாய்ப்பு..
நாளை நிகழ உள்ள சந்திர கிரகணத்தை பார்வையிடுவது குறித்து, கலிலியோ அறிவியல் கழகத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.நடப்பாண்டின் அரிய நிகழ்வாக, குறுகிய இடைவெளியில் சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன. ஜூன் மாதத்தில் சந்திர கிரகணம் இரண்டு முறை நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக, நாளை, (5ம்தேதி) புறநிழல் சந்திர கிரகணம் நிகழ்கிறது.இதுகுறித்து கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:ஜூன் மாதத்தில் நடந்த நிகழ்வுகளை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பார்வையிட்டனர். நாளை நிகழ உள்ள சந்திர கிரகணமும் புறநிழல் சந்திர கிரகணமாகவே உள்ளது. ஆனால் இந்த நிகழ்வை இந்தியாவில் பார்க்க முடியாது.இந்நிகழ்வு 5ம் தேதி காலை, 8:38 மணிக்கு நிகழ உள்ளது.
காலை, 9:59 மணிக்கு உச்சமடைந்து, 11:21 மணிக்கு முடிகிறது. புறநிழல் சந்திர கிரகணத்தின் போது பூமி மறைக்காமல், பூமியின் நிழல் மட்டும் நிலவின் மீது விழுவதால் தெளிவற்ற கிரகணமாக தெரியும்.இந்த கிரகணம் நிகழும் நேரம், இந்தியாவில் பகலாக உள்ளதால் இதனை காண முடியாது. இருப்பினும், இந்நிகழ்வை காண விருப்பமுள்ளவர்கள் 'ஆன்லைனில்' பார்வையிடலாம். இதற்கான விளக்கம் அளிக்க, 87782 01926 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.
No comments: