Breaking

பெண்கள் இந்த விரலை தவிர மற்ற விரல்களில் மெட்டி அணிய கூடாது ? ஏன் தெரியுமா?




பெண்கள் இந்த விரலை தவிர மற்ற விரல்களில் மெட்டி அணிய கூடாது ? ஏன் தெரியுமா?

திருமண முடிந்த பெண்கள் கால்களில் மெட்டி அணிவது உண்டு. அது நமது பாரம்பரிய பழக்கம் ஆகும். முன்பு ஆண்கள் தான் அணிந்திருந்தனர். திருமணமான ஆண்கள், கால் விரலில் அணிந்திருக்கும் மெட்டியை, குனிந்த தலை நிமிராமல் நடந்து வரும் பெண்கள் பார்த்தவுடன், இவன் திருமணம் ஆனவன் என்பதை தெரியப்படுத்த அணிந்து இருப்பார்கள், நாளடைவில் இந்த மெட்டி பெண்களுக்கு சொந்தமாகி விட்டது. இம்மெட்டி பெண்கள்
அணிவதால் நடக்கும் போது மெட்டி அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது, ஆகையால் திருமணமான பெண்கள் கால்களில் மெட்டி கட்டாயம் அணிய வேண்டும். இது காலம் காலமாக முன்னோர்கள் நம்மை கட்டாயமாக கடைபிடிக்க சொன்ன பாரம்பரிய பழக்கம் ஆகும். இப்படி நம்மை நம் முன்னோர்கள் மெட்டி அணிய சொல்வது சடங்கு சம்பிரதாயம் மட்டுமல்ல. அதையும் தாண்டி இதில் மருத்துவ குணமும் மறைந்துள்ளது. பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும், கால் விரல்


நரம்புகளுக்கும் ஒரு விதமான தொடர்பு உள்ளது. கால் விரல்களில் மெட்டி அணிவதால் கருப்பையில் நீர் அளவினை சமநிலையில் வைத்து கருப்பையை பாதுகாக்கிறது. இதனால் கருப்பையில் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன. இத்தகைய மெட்டியை வெள்ளியில் தான் போடவேண்டும். ஏனெனில் வெள்ளியில் ஒரு வகை காந்த சக்தி உள்ளது. இதனை கால் விரல்களில் அணிவதால் அந்த காந்தசக்தி கால் நரம்புகளில் வழியே ஊடுருவி நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. கட்டை விரலின் பக்கத்தில் உள்ள விரல்களில் மட்டும் தான் நம் முன்னோர்கள் மெட்டி அணிந்து வந்தார்கள். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் நம் மக்கள் கட்டைவிரல் மற்றும் சுண்டு விரல் இவ்விரண்டையும் தவிர்த்து மற்ற மூன்று விரல்களிலும் மெட்டி அணிகின்றனர். இவ்வாறு பெண்கள் செய்யும் சிறு சிறு தவறுகளால் தன் வீட்டில் பல பிரச்சனைகளும் குழப்பங்களும் வருகின்றது. சிறிய தவறு அவர்களது குடும்பத்தையே பாதிக்கின்றது. இதனால் பல வீடுகளில் பண பிரச்சனை கூட ஏற்படுகிறது. கட்டை விரலுக்கு பக்கத்து விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும் என்பது சாஸ்திரம். பெண்கள் ஒரே காலில் மேற்பட்ட மெட்டியை அணிவதால் உடல்நிலை பாதிப்படைகிறது. 

இப்படி அணிவதால் வீட்டில் வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். பணம் நம் கைக்கு வரும் வேகத்தைவிட வெகு வேகமாக கைகளிலிருந்து சென்றுவிடும். அதேபோல் மெட்டி தேய்ந்த பிறகு தூக்கி எறியக் கூடாது. அதனை கொண்டு புதிய மெட்டியை வாங்கி அணிய வேண்டும். ஒருபோதும் திருமணமான பெண்கள் மெட்டி அணியாமல் இருக்க கூடாது. சாஸ்திரத்தில்
நம்முன்னோர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த அனைத்தும் நம் நன்மைக்கே. அதில் அறிவியலும், மருத்துவ குணமும் மறைந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டு அதனை நாம் கடைபிடிக்க வேண்டும். எனவே திருமணமான பெண்கள் கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ள விரலில் மட்டும் மெட்டி அணிவதே சிறந்தது. அதுதான் நமக்கு ஆரோக்கியத்தை தருகிறது.அதுவே நம் பாரம்பரியமும் ஆகும்.

No comments:

Powered by Blogger.