அஞ்சல் துறை-அஞ்சல்தலை தொடர்பான புகைப்படப் போட்டி..
அஞ்சல் துறை-அஞ்சல்தலை தொடர்பான புகைப்படப் போட்டி..
சுதந்திர தின அஞ்சல் தலையில் வெளியிடுவதற்காக 'இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்கள் (கலாச்சாரம்)' என்ற தலைப்பில் புகைப்படம் எடுக்கும் போட்டி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அஞ்சல்துறையின் திருச்சி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ரா.கணபதி சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
"அஞ்சல் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் அஞ்சல்தலை தொடர்பான புகைப்படப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் புகைப்படம், சுதந்திர தின அஞ்சல் தலை வெளியீட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.
2020 சுதந்திர தினத்தை முன்னிட்டு 'இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்கள் (கலாச்சாரம்)' என்ற தலைப்பில் புகைப்படம் எடுக்கும் போட்டி கடந்த 7-ம் தேதி முதல் 'MyGov Portal'-ல் தொடங்கப்பட்டுள்ளது.
அனைத்து வயதினரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டியாளர்கள், தாங்கள் எடுத்த புகைப்படங்களை https://www.mygov.in/task/design-stamp-themed-unesco-world-heritage-sites-india-cultural/ என்ற வலைதள இணைப்பில் வரும் 27-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு திருச்சி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தை 0431-2414149 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்"
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: