Breaking

மாணவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கலாம்.. நெறிமுறைகள் வெளியிட்டது மத்திய அரசு..






மாணவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கலாம்.. நெறிமுறைகள் வெளியிட்டது மத்திய அரசு..

ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்விநிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிமுறைகளை உருவாக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.


இதனையடுத்து இந்த வழக்கை கடந்த 6-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வரும் 15-ம் தேதிக்குள், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி "எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்பு மாணவர்களுக்கு 30 நிமிடங்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம். 1 முதல் 8-ம் வகுப்பு வரை 45 நிமிடங்களுக்கு 2 பாடங்களை நடத்தலாம். 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களில் 4 வகுப்புகள் நடத்தலாம்" என்று உத்தரவிட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.