Breaking

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்கப்படும் அமைச்சர் ஆலோசனை..





பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்கப்படும் அமைச்சர் ஆலோசனை..

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

தமிழக பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. அதனைத் தொடர்ந்து, 11 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்?

மதிப்பெண்களை காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் வழங்கலாமா அல்லது கிரேடு முறை அளிக்கலாமா? ஆன்லைன் வகுப்பு, கல்வி தொலைக் காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடைபெறவுள்ளது.

சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ், இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

No comments:

Powered by Blogger.