Breaking

நாம் அரிசி கழுவி ஊற்றும் தண்ணீரில் உள்ள சத்துக்களைப் பற்றி அறிவோம்




நாம் அரிசி கழுவி ஊற்றும் தண்ணீரில் உள்ள சத்துக்களைப் பற்றி அறிவோம்

நாம் அன்றாட நம் சமையல் அறையில் சாப்பாடு வைப்பதற்காக அரிசியை கழுவி அந்த கழுவிய நீரை கீழே ஊற்றி விடுகிறோம். ஆனால் நாம் கீழே ஊற்றும் நீரில் தான் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த சத்துக்கள் என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

அரிசி கழுவிய நீரை தலையில் தடவி குளித்து வர முடியின் பலம் அதிகரிக்கும். அந்த நீரை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் துடைத்து கழுவினால் முகம் பொலிவு பெரும். மேலும் முகத்தின் தோற்றம் இளமையாகவே அமையும்.


தலைமுடி அதிக வறட்சியுடனும், மென்மையின்றியும் இருந்தால் அரிசி கழுவிய நீரை கொன்டு முடியை அலசி சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரால் முடியை அலச வேண்டும்.இதனால் தலைமுடி இயற்கை நிறத்துடனும் மிகவும் வலுவாகவும், அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் காணப்படும்.

குழந்தைகளை குளிக்க வைக்க அரிசி கழுவிய நீரை பயன்படுத்தினால் குழந்தைகள் நன்றாக தூங்கும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

No comments:

Powered by Blogger.