Breaking

தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு..





தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு..

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் தியாகராசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு, ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற, நடப்பு ஆண்டுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். விண்ணப்பிக்க, தமிழறிஞர்கள், 58 வயது நிரம்பி இருக்க வேண்டும். மேலும், ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில், இணைய வழியே பெறப்பட்ட வருமானச்சான்றிதழ், தமிழ் பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள், இரண்டு தமிழறிஞர்களிடம், தமிழ் பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்று பெற்று, விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, www.tamilvalarchithurai.com என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், 500 ரூபாய் மருத்துவப்படி மற்றும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பாஸ் சலுகை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில், வரும் செப்., 30க்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.