Breaking

பள்ளிகளை எப்போது திறக்கலாம்? பெற்றோர்கள் கருத்துக்களை கூற இன்றே கடைசி நாள் /லிங்க் உள்ளே..





பள்ளிகளை எப்போது திறக்கலாம்? என்பது குறித்து பெற்றோரிடம் கருத்துக்கேட்டு, தமிழக கல்வித்துறை இன்று மத்திய அரசுக்கு பதில் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள்கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. எப்போது மீண்டும் திறக்கப்படும்?
என்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை சார்பில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்டு அனுப்பவேண்டும். அதில், ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதத்திற்குள் பள்ளிகள் மீண்டும் திறக்க வசதியான காலம் எது? மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளிகளில் செய்யப்படவேண்டிய பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என்ன?, மேலும் இதுதொடர்பான பிற கருத்துகள் ஆகியவற்றை குறிப்பிட்டு 


coordinationee1@gmail.com, rsamplay.edu@nic.in 

என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு 20-ந்தேதிக்குள் (இன்று) அனுப்ப வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், பெற்றோரிடம் இருந்து பெற்ற கருத்துகளையும், மாநில அரசின் கருத்துகளையும் சேர்த்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கல்வித்துறை இன்று பதில் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆந்திரா செப்டம்பர் 5-ந்தேதியும், கேரளா ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகும், கர்நாடகா செப்டம்பர் 1-ந்தேதிக்கு பிறகும் பள்ளிகளை திறக்கலாம் என்று அந்தந்த மாநில கல்வித்துறை சார்பில் முதற்கட்ட முடிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Powered by Blogger.