Breaking

மாணவர்கள் இன்ஸ்பையர்'விருது,நவீன கண்டுபிடிப்புக்கான படைப்புகள் பதிவு செய்ய DIRECT LINK..





மாணவர்கள் இன்ஸ்பையர்'விருது,நவீன கண்டுபிடிப்புக்கான படைப்புகள்
பதிவு செய்ய DIRECT LINK..

மத்திய அரசு ஆண்டுதோறும், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில், நவீன கண்டுபிடிப்புக்கான விருதுகள் வழங்குகிறது. இதற்கு, பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும். நடப்பாண்டில் கொரோனா பிரச்னை உள்ளதால், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.


எனவே, நேரடியாக அறிவியல் கண்காட்சி நடத்தமுடியாத நிலையில், மாணவர்களின் எண்ணங்களை, 'ஆன்லைனில்' பெற்று விருது வழங்க, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை முடிவு செய்துள்ளது.அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், 6 முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். புதிய கண்டுபிடிப்பு குறித்த, தங்கள் எண்ணங்களை, www.inspireawards-dst.gov.in என்ற, இணையதளத்தில், செப்., 30க்குள் பதிவு செய்ய வேண்டும்.

No comments:

Powered by Blogger.