Breaking

சென்னை IIT புதிய ஆன்லைன் இளநிலைப் பட்டப்படிப்பு அறிமுகம்







சென்னை IIT புதிய ஆன்லைன் இளநிலைப் பட்டப்படிப்பு அறிமுகம்

பொது முடக்கம் காரணமாக இணைய வழி வகுப்புகள் தற்போது அதிகரித்து வரும்நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக இளநிலை பட்டப்படிப்பை இணைய வழியில் பயிலும் புதிய வாய்ப்பினை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக அடிப்படை வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என்ற 3 கட்ட வழிமுறைகளில் 31 பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. திறன் அடிப்படையில் இளநிலை பட்டப்படிப்பை 3 ஆண்டு முதல் 6 ஆண்டுகளுக்குள் முடிக்கலாம். அதன்படி, இளநிலை பட்டம் பெற தொடக்க நிலையில் இருந்து பட்டயம், பின்னா் பட்டப்படிப்பு என மூன்று படி நிலைகளாக வரவேண்டும். இதில் எந்த படிநிலையில் இருந்து வேண்டுமென்றாலும் மாணவா்கள் வெளியேறலாம்.



அதாவது, பட்டயம் முடிந்த நபா் பட்டப்படிப்பு செல்லாமல் பட்டய நிலையிலேயே அதற்குரிய பட்டம் பெற முடியும்.
இதற்காக விநாடி வினா மற்றும் பருவ அடிப்படையில் தோவு நடைபெறும். இந்தப் படிப்பில் சேர பிளஸ் 2 வகுப்பு தோச்சி பெற்றிருந்தால் போதுமானது. இணைய வழி படிப்பில் சேர எந்த வயது வரம்பும் கிடையாது. இந்த பட்டப்படிப்பிற்கான வகுப்புகள் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளன. இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய இணையதளத்தில் காணலாம்.

No comments:

Powered by Blogger.