செவ்வாய் கிரகத்தின் நிலவான "ஃபோப்ஸ் (Phobes)"-ஐ படம் பிடித்தது இஸ்ரோவின் மங்கல்யான். இதை முதல்முதலாகப் படம்பிடித்த பெருமை இந்தியாவையே சேரும்.
செவ்வாய் கிரகத்தின் நிலவான "ஃபோப்ஸ் (Phobes)"-ஐ படம் பிடித்தது இஸ்ரோவின் மங்கல்யான். இதை முதல்முதலாகப் படம்பிடித்த பெருமை இந்தியாவையே சேரும்.
பூமியின் நிலவைவிட சிறியது!
செவ்வாய் கிரகத்தைக் கண்காணிக்க மங்கல்யான் விண்கலத்தை 2013-ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையை அடைந்து செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிவருகிறது. தற்போது, செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான ஃபோப்ஸை படம் பிடித்து அனுப்பியுள்ளது மங்கல்யான்.
இந்த புகைப்படத்தை அதன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது, இஸ்ரோ.
இந்த புகைப்படத்தை ஜூலை 1-ம் தேதி, செவ்வாய் கிரகத்திலிருந்து 7,200 கி.மீ தூரமும், போப்ஸிடமிர்ந்து 4,200 கி.மீ தூரம் இருந்தபோது மங்கல்யான் எடுத்திருக்கிறது.
செவ்வாயின் மிகப்பெரிய நிலவாக இருந்தாலும், இது நம் பூமியின் நிலவைவிட அளவில் சிறியதுதான்.
இந்தப் புகைப்படத்தின் வண்ணம் சரிசெய்யப்பட்டு, 6 MCC பிரேம்களிலிருந்து உருவாக்கப்பட்டதெனத் தெரிவித்திருக்கிறது இஸ்ரோ. ஃபோப்ஸ் நிலவு carbonaceous chondrites கலவைகளால் ஆனது.
தற்போது, ஃபோப்ஸ் நிலவிற்கு பொல்லாத காலம் என்று புகைப்படம் மூலம் கூறலாம். அதிலுள்ள பெரிய பள்ளம் (Stickney crater) சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பாதிப்பின் வெளிப்பாடாகும். இந்தப் படத்தில், மேலும் பல பள்ளங்களை உங்களால் காணமுடியும்" என்றும் தெரிவித்திருக்கிறது இஸ்ரோ.
No comments: