Breaking

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளிடம் பள்ளியில் சேர்க்க TC (மாற்று சான்றிதழ்) கேட்கக்கூடாது.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..






கொரோனா காரணமாக
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளிடம் பள்ளியில் சேர்க்க TC (மாற்று சான்றிதழ்) கேட்கக்கூடாது.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

கொரோனா' அச்சுறுத்தல் காரணமாக, சொந்த ஊர்களுக்கு திரும்பிய வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி குறித்து, அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம், வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. நாடு முழுதும், கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியதும், வெளி மாநிலங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள், குடும்பத்துடன், சொந்த ஊர்களுக்கு திரும்பினர். நீக்கம் : கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததை அடுத்து, அவர்கள் தங்கள் சொந்த ஊர்களிலேயே வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளின் கல்வி தொடர்பாக, அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம், சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.

அதன் விபரம்:அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் படித்து வந்த மாணவர்கள், வேறு மாநிலங்களுக்கோ அல்லது அதே மாநிலத்தின் வேறு பகுதிகளுக்கோ குடிபெயர்ந்து இருந்தால், அவர்களின் விபரங்களை, பள்ளி நிர்வாகம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மாணவர்களை, குடிபெயர்ந்த மாணவர்கள் அல்லது தற்காலிகமாக அணுக இயலாதவர்கள் என, குறிக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்களை தொலைபேசி வாயிலாக அணுகி, இந்த விபரங்களை, அனைத்து பள்ளிகளும் சேகரிக்க வேண்டும்.இந்த மாணவர்கள், எப்போது வேண்டுமானாலும் ஊர் திரும்பலாம் என்பதால், அவர்களின் பெயர்களை, பள்ளிக்கூட பதிவேட்டில் இருந்து, நீக்கக் கூடாது. உத்தரவு : அவர்களை பற்றிய விபரங்கள், கல்வித்துறை இயக்குனரகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.அதேபோல, 'வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர் களின் குழந்தைகளை, உள்ளூரில் உள்ள பள்ளிகளில் சேர்க்க, அடையாள அட்டையைத் தவிர, டி.சி., எனப்படும் இடமாற்ற சான்றிதழ் போன்ற ஆவணங்களை, பள்ளி நிர்வாகங்கள் கேட்கக் கூடாது' என, அனைத்து பள்ளிகளுக்கும், மாநில அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அந்த வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. ஆக., 10ல் டில்லி பல்கலை தேர்வு'டில்லி பல்கலைக் கழகத்தில், இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக நடைபெறவுள்ள இறுதி தேர்வுகள், அடுத்த மாதம், 10ல் துவங்கி, 31ல் முடிவடையும்' என, பல்கலை நிர்வாகம், டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.'ஆன்லைன்' வாயிலாக தேர்வு எழுதாதவர்கள், செப்டம்பரில், கல்லுாரிக்கு வந்து, வழக்கமான முறையில் தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.