Breaking

செவ்வாய் கோளில் உயிர்கள் உள்ளனவா ... ஆராய்வதற்கு கிளம்பியது அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி வின்கலம்......






செவ்வாய் கோளில் உயிர்கள் உள்ளனவா ... ஆராய்வதற்கு கிளம்பியது அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி வின்கலம்......

கடந்த 11 நாட்களில் பூமியிலிருந்து செவ்வாயை நோக்கி செல்லும் மூன்றாவது விண்கலமாக, நேற்று அனுப்பப்பட்ட அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விண்கலம் பெர்சவரன்ஸ் அமைந்துள்ளது. 

16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செவ்வாய் கோள் ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக 'பெர்சவரன்ஸ்' என்ற விண் ஊர்தி நேற்று விண்ணில் ஏவப்பட்டது. ஒரு டன் எடை மற்றும் ஆறு சக்கரங்கள் உள்ள இந்த விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாம். புளோரிடாவின் கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் ஒன்றின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்ணூர்தி செவ்வாயில் தரை இறங்க இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்படுகிறது.இது பூமியிலிருந்து இயந்திர ஆற்றல் இயக்கம் மூலம் இயக்கப்படும். சுமார் 40 கிலோமீட்டர் அகலமுள்ள ஜெசீரோ கிரேட்டர் எனும் பள்ளத்தில் இதைத் தரையிறக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 500 அடி ஆழமுள்ள இந்தப் பள்ளத்தில் ஒரு காலத்தில் கணிசமான அளவில் நீரோட்டம் இருந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். செவ்வாயில் தரையிறங்கிய பின்பு ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது செவ்வாயின் பாறைகள் மற்றும் மண்ணின் மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் சேகரிக்கும்.



இதில் உள்ள 23 படப்பிடிப்புக் கருவிகள் செவ்வாயில் நுண்ணுயிர்கள் உள்ளனவா என்பதை அறிய உதவும். எனினும், பெர்சவரன்ஸ் கண்டுபிடிக்கும் முடிவுகளின் துல்லியத்தன்மை பூமியில் உறுதிசெய்யப்படும். அண்மையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் செவ்வாயை நோக்கி விண்கலங்களை செலுத்தியுள்ளன. கடந்த 11 நாட்களில் பூமியிலிருந்து செவ்வாயை நோக்கி செல்லும் மூன்றாவது விண்கலமாக பெர்சவரன்ஸ் அமைந்துள்ளது.

No comments:

Powered by Blogger.