Breaking

உடலில் இருந்து வெளியேறும் வியர்வை துர்நாற்றத்தைக் போக்க வாசனை திரவியங்கள் பயன்படுத்தினால் உடலுக்கு ஆபத்து என்ன தெரியுமா





உடலில் இருந்து வெளியேறும் வியர்வை துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த நிறைய பேர் வாசனைத் திரவியங்களை விரும்பி பயன்படுத்துகிறார்கள்.வாசனை திரவியங்கள் காலை முதல் மாலை வரை வாசனையை வெளியிட்டுக் கொண்டிருக்கும்.உடுத்தும் உடையிலிருந்து நறுமணம் வீசுவதற்காக வாசனைத் திரவியங்களை உபயோகித்து கொள்பவர்களும் உண்டு.எப்படி பயன்படுத்த வேண்டும். உடலின் எந்த பகுதியில் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
வித விதமான வாசனைத் திரவியங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.மேலும் சிட்ரஸ் பழங்கள் ,பூக்கள், மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வாசனை பொருட்கள் தான் அதிகளவில் புழக்கத்தில் இருக்கின்றன. அது போன்ற இயற்கை வாசனைகளை கலந்த பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. அவை நீண்ட நேரம் வாசனையை தக்க வைத்திருக்கும்.எந்த விதத்திலும் உடல் பாகங்களுக்கு தீங்கு விளைவிக்காது.


பகல் வேளையில் பயன்படுத்துவது,இரவு நேரங்களில் பயன்படுத்துவது என இரு வகையான வாசனை திரவியங்கள் உள்ளன.வெளியிடங்களுக்கு, வேலைகளுக்கு, கடற்கரைக்கு செல்லும் போது பகல்நேர வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். அவை பகல் பொழுதுக்கு ஏற்ப கடினத் தன்மையுடன் இருக்கும். இரவு நேரத்தில் விருந்துகள், பார்ட்டிகளுக்கு செல்லும் போது இரவு நேர வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம்.எந்த நேரத்துக்கு பயன்படுத்தகூடிய வாசனைத் திரவியம் என்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை கவனத்தில் கொண்டு நாம் உபயோகிக்கலாம்.

No comments:

Powered by Blogger.